Friday, April 30, 2010

பிரிவின் வலி



பிரிந்து வாழ்வது 
எவ்வளவு வலி என்பது 
பிடித்தவர்களை பிரிகையில் 
தான் தெரிகிறது-பிரிவின் 
சுகமும் பிடித்தவர்களை 
சேர்க்கையில் தான் தெரிகிறது
வெப்பத்தால் ஆவியாகி மீண்டும் 
மழை என வந்த நீர்த்துளியின் கூற்று!..
****************************************************************************************************************

Monday, April 26, 2010

சொல்லிக்கொள்ள ஒரு தோழி-என் எழுதுகோல்


என்னை முழுமையாக
புரிந்து கொண்ட தோழி
எழுதுகோல்-என் எண்ணத்தை
என்னை விட அழகாய்பிரதிபளிப்பவள்
நான் எதையோ
மனதில் கிறுக்கல் என நினைப்பதை 
கவிதையாய் வரைவாள்
சுருக்கமாகச்  சொல்லப்போனால்
வெள்ளைத்தாளில் வண்ண எண்ணம்
எழுதுகோல்....
*******************************************************

Sunday, April 25, 2010

நீ மழை ரசிகை $ நான் மலர் ரசிகன்



ஒவ்வொரு முறையும் 
மழை வரும் போதும் 
ரசிக்கத்தான் முற்படுகிறேன் 
ஆனால் அதற்கு முன்னதாய் 
வானவில்லாய் நீ வந்து 
என்னுடன் அம்ர்ந்துகொள்கிராய்
இனி மழைக் எங்கே என்னில் இடம் 
மலரிவள் பேசுகையில்; நகைகையில் 
தோள்சாய்கையில்!..
நீ மழை ரசிகை; .நான் மலர் ரசிகன்
*******************************************************************************

Friday, April 23, 2010

என் அம்மா


என்
மறதியோ மரணமோ
அவளிற்காய் நிகழ்ந்திடல் வேண்டும் 
ஆம்-எனக்கு எது பிடிக்கும் 
என்று பார்த்து பார்த்து சமைக்கிறாள்
எனக்கேதேனும் என்றால் துடித்துப் போகிறாள் 
எனக்கு தெரிய அவள் இது வரை 
எங்கேயும் போனதில்லை-ஒரே ஒரு முறை 
என் அப்பாவுடன் கோவிலிற்கு மட்டும் 
அதுவும் என் பிறந்தநாள் என்பதால் 
எல்லோரும் சொல்வார்கள்-தினமும் 
அதிஷ்டத்தின் முகத்தில் விழிக்கவேண்டுமென்று 
எனக்கு நினைவு தெரிய 
அன்பின் முகத்திலயே விழித்துக்கொண்டிருக்கிரேன் 
காலை தேநீருடன் என் அம்மா!...
*******************************************************************

அவளால்!


ஒவ்வொரு நாளும்
முதல் மின்னஞ்சல்
குறுந்தகவல் -என
எல்லாவற்றையும் பார்க்கும் போதும்
அவளுடையதாக  இருக்க வேண்டுமென்று
மனம் படபடத்துக்  கொள்கிறது
அது அவளுடையதாக இல்லை எனில்
பதபதைத்தே போகிறது மனம் -ஒரு வேளை
அவள் நலமுடன் இல்லையோ என்று
அப்போது தெரிகிறது எனக்குள்ளும்
ஒரு தாய்மை வாழ்கிறது என்று
அது அவளால் தான்!...
************************************************************************

Thursday, April 22, 2010

?



அவள் நினைவுகளில் இருந்து
விடுபட  முயல்கிறேன்
சிறிது சிறிதாய்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது
அவளை மறந்திட வேண்டும் என்று 

நினைக்கும் நொடிகளில் மட்டும் 
ஆனால் சில நேரம் நான் மறந்தே போகிறேன் 
அவளை மறக்க வேண்டும் என்பதை
ஆம்,
இந்த மறதி மட்டுமே 
நினைவு படுத்திக் கொண்டிருக்கிறது 
நான் உயிருடன் இருகிறேன் என்று!.
****************************************************************************

Wednesday, April 21, 2010

பெண் நிலவு



கடந்த வாரம் எனக்கு 
இரவு நேர வேலை
பகலில் தான் உறங்குவேன் 
அப்படி உறங்குகையில் ஒரு நாள் 
என்னருகில் உறங்க வந்தாய் 
நான் எழுந்து கொண்டேன் 
என்ன இடைஞ்சலா என்று கேட்டாய் 
இல்லை இல்லை ஒரு நாளாவது
பகலில் நிலவு உறங்குவதை 
பார்க்கலாமே என்று தான் 
எழுந்து கொண்டேன் என்றேன்-சிரித்தாய் 
நான் அன்றைய தினம் முழு பெவுர்ணமி 
என்றே நினைத்தேன்-ஓ 
இவள் தான் பெண்  நிலவோ!........
********************************************************************** 

என் வீட்டு அம்மன்


தீபாவளி சிறப்பு விற்பனை 
அறிவித்திருந்தார்கள் 
சரி, என் வீட்டு 
அம்மனுக்கு பட்டுத்தலாமென்று
உன்னை அழைத்துச் சென்றேன் 
நீயும் பட்டுடுத்திப் பார்க்கிறேன்
என்று உடுத்திக்கொண்டு வந்தாய் 
உனைப் பார்த்த ஒரு குழந்தை 
கத்தியேவிட்டது-ஆச்சிரியத்தில் 
சிறப்பு விற்பனையில் 
மெழுகுச் சிலை ஏதும் 
விற்பனை செய்கிறார்களா என்று..... 

Tuesday, April 20, 2010

கடைசி நொடி சுவாசம்


கடலென பெய்யும் மழை
காற்று சுழன்றடிக்க
கதிரவன் ஒழிந்தும்
வெளிவந்தும் விளையாட,
எல்லோரும்-ஓர்
ஒலைக்குடிசையில்
தஞ்சம் புகுந்தோம்
பாவம் அப்போது
எங்களுக்கு
நேரெதிர் திசையில்
அலைந்து ஒளிந்து
மடிந்து -இனிமேல்
முடியாது போவென
உதிர்ந்தே போனாள்
அந்த ஒற்றை
ரோஜா இலை
அப்போது உணர்ந்தேன்
கடைசி நொடி சுவாசம்
எப்படி இருக்குமென்று.....
....

நீயும் உன்மீதான என் அன்பும்



நான் எப்போதும் 
உன்னை வெறுத்து 
ஒதுக்குகிறேன்-அப்போதும் 
நீ என்னிடம் பேசத்தான் செய்கிறாய் 
என்று கேட்டாய்-அது எப்பிடி 
குழந்தையும் தான் தவறு 
செய்கிறது-அதற்காய் 
தாயென்ன ஒதுக்கவா செய்கிறாள் 
நீயும் உன மீதான அன்பும் 
எனக்கு ஒரு குழந்தை போன்றுதான்
உன்னை பிரதிபலிபதற்கான பிம்பம் தான் நான்
வருத்தப்படாதே- உன்னை அழகாகவே 
பிரதிபலிப்பேன்!....
*****************************************************************************

Monday, April 19, 2010

உனது ஓவியத்தை நான் பார்க்கையில்



நான் முக்கியமான
அலுவலக வேலைகளை 
பார்த்துக்கொண்டிருப்பேன் 
எங்கோ இருந்து ஓடி வருவாய் 
வந்தென்னிடம் -நான் 
போட்ட  கோலத்தை பாருங்கள்
என்று விடா பிடியாய் 
அழைத்துக்கொண்டு செல்வாய் 
நீ விடுத்தாலும் நான் 
விடைபெற மாட்டேன் அது வேறு 
நான் ஆர்வமாய் பார்ப்பேன் 
ஒரு புள்ளிமட்டுமே வைத்திருப்பாய் 
பிறகுனைப் பார்க்கையில் 
நீ வெட்கிச் சிவப்பாய் 
நானோ சிரித்தே சிவப்பேன்!... 
**********************************************************************

மலர்கிறாய்


ஒவ்வொரு நாளும்
நீ
புதிதாய் தெரிகிறாய்
உருகி மலர்கிறாய்
ஏனென்று யோசித்தேன்
நான் ஏதோ ஒன்றை
புதிதாய் உணர்ந்தேன்
இப்போது புரிகிறது
மலரே மலரை நினைகையில்
மலர்ந்திடத்தானே செய்யும்!...

Saturday, April 17, 2010

உன் வாசம்



தாய் அருகிருக்க
பசி அறியா பிள்ளை போலத்தான்
நீ அருகிருக்க
உன் வாசம் நான் அறியவில்லை
இன்று நீ பிரிந்து சென்றாய்
நான் புரிந்து கொண்டேன்
மரமிருந்து பூ உதிர்ந்தாலும்
வடு மட்டும் எஞ்சியிருப்பது
போலத்தான்-நீ
கடைசியாய் என் விரல்
தொட்டு விடை பெற்றாயே
அதில் இன்னும் உன் வாசனை
பதிந்தே இருக்கிறது!...
***********************************************

Friday, April 16, 2010

வழி சொல் வலிக்காமல் வரைந்திட !..



கண்மூடி என்ன
மண்மூடிப் போனாலும்
உன் முகம் வரைந்திடுவேன்
உனக்கு வலிக்காமல் எப்படி
உனை பிரசிவிப்பேன் என்றுதான்
சிந்தித்துக்கொண்டிருக்கிரேன்!...
ஒரு வழிசொல் வலிக்காமல் வரைந்திட !..
********************************************************

Wednesday, April 14, 2010

வீதியுலா



எல்லோரும்
வீதியுலா செல்லும் போது
வேண்டாததை வீசிவிட்டு
செல்கிறார்கள் என்றால்
நீ மட்டும்
எனக்கு வேண்டியதை அல்லவா
வீசிவிட்டு செல்கிறாய்
உன் வெட்கத்தை!...
*******************************************************

Sunday, April 11, 2010

என் சில நேரம்



நானும் சில நேரங்களில்
நெடுஞ்சாலை மரம் போலத்தான்
என் கனுவுகளை எத்தனையோபேர்
மிதித்துவிட்டு போகிறார்கள்-என்ன
சில நேரம் உன்னை போன்ற சில
தேவதைகளும்-ஆனாலும்
வலிக்க மறுக்கிறது
ஆம்
உன் கால்களும் என் கனவுகளைப்போன்று
மென்மையாக இருப்பதினாலோ என்னவோ!...

Saturday, April 10, 2010

lyrics

Monkey also have common sense..


Two blind persons wanted to drink water at the RagiGudda temple, Bangalore. When they were unable to operate the tap, this mother monkey opened the tap for them, allowed them to drink water, drank some water herself and then closed the tap before leaving the scene.

PS: Do share this pic with your friends. It is proof that humanity does exist - even if we humans have forgotten it ourselves...

Thursday, April 8, 2010

எவரிடம் சொல்ல



தனிமையில் அமர்கையில்
உன் நினைவுகள் வருகிறது
அதை மறுக்க முயல்கையில்
நான் என்னை மறந்தே போகிறேன்
நீ என்னிடம் சொல்லிவிட்டாய் பேசாதே என்று
நான் எவரிடம் சொல்ல உயிருடன் இல்லையென்று!...

Sunday, April 4, 2010

ஒருகணம்




எல்லாம் உன்முகமாய் தெரிகிறதே
என்னிதையம் ஒருமுகமாய் துடிக்கிறதே
ஏனோ தொலைகிறேன்
எதையோ சொல்ல நினைக்கிறேன்
ஒரு துளி; ஒருகணம் வாழ்வோம் வா வா!..

Saturday, April 3, 2010

அங்காடித் தெரு



அங்காடித் தெரு- திரையில் காணவும்.
புதியதோர் பரிமாணத்தில் தமிழ் திரையுலகம்
Free Backlinks