Saturday, April 17, 2010

உன் வாசம்



தாய் அருகிருக்க
பசி அறியா பிள்ளை போலத்தான்
நீ அருகிருக்க
உன் வாசம் நான் அறியவில்லை
இன்று நீ பிரிந்து சென்றாய்
நான் புரிந்து கொண்டேன்
மரமிருந்து பூ உதிர்ந்தாலும்
வடு மட்டும் எஞ்சியிருப்பது
போலத்தான்-நீ
கடைசியாய் என் விரல்
தொட்டு விடை பெற்றாயே
அதில் இன்னும் உன் வாசனை
பதிந்தே இருக்கிறது!...
***********************************************

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அந்த வாசனையை மறவாமல் கேட்டு பார்
    உன்னால் கருகிய என் இதயத்தின் வலி சொல்லும்.........
    என் விரலில் நீ விட்டு சென்ற உன் வாசனை மட்டுமே போதும்
    கோடி முறை புதிதாய் பிறப்பேன் நான்
    எனை தொட்டு சென்ற தென்றலுக்கு
    நினைவுகளுடன் மலர்......

    ReplyDelete

Free Backlinks