Wednesday, April 21, 2010

பெண் நிலவு



கடந்த வாரம் எனக்கு 
இரவு நேர வேலை
பகலில் தான் உறங்குவேன் 
அப்படி உறங்குகையில் ஒரு நாள் 
என்னருகில் உறங்க வந்தாய் 
நான் எழுந்து கொண்டேன் 
என்ன இடைஞ்சலா என்று கேட்டாய் 
இல்லை இல்லை ஒரு நாளாவது
பகலில் நிலவு உறங்குவதை 
பார்க்கலாமே என்று தான் 
எழுந்து கொண்டேன் என்றேன்-சிரித்தாய் 
நான் அன்றைய தினம் முழு பெவுர்ணமி 
என்றே நினைத்தேன்-ஓ 
இவள் தான் பெண்  நிலவோ!........
********************************************************************** 

1 comment:

  1. உன் பார்வைகளலே தினம்
    பரிசுத்தப்படுகிறது
    இந்த பெண் நிலவு....................

    ReplyDelete

Free Backlinks