Saturday, December 10, 2011

என்னுள்ளே இருந்து கொள்

என்னுளே நுழைந்து கொண்டு 
ஏதேதோ செய்கிறாய்-நேற்று 
பசி தூக்கம் மறந்துவிட்டேன்
இன்று என்னையே உனக்குள் 
தொலைத்து விட்டேன்-எங்கும் 
போய் விடாதே என்னுள்ளே இருந்து கொள் 
**************************************************

Saturday, December 3, 2011

ஒரு கடல் பயணத்தில்.........சுற்றிலும் தண்ணீர் இருந்தும் 
பருக மனம் வரவில்லை 
உதடுகள் மட்டும் உணர்கிறது 
தாகம் என்று-மனம் 
வெகுதொலைவில் எனக்காய்
ஒரு பறவை காத்து கொண்டிருக்கிறது என 
தேடி அலைந்து கொண்டிருக்கிறது
ஒரு கடல் பயணத்தில்.........
************************************************************

Tuesday, September 20, 2011

நீயே யூகித்துக்கொள்.....நான் உனை பார்க்கும் பொழுதெல்லாம் 
மனதில் பதிகிறாய்-மருதாணி போல் 
வாடாமல் மலர்கிறாய்-காகிதப்பூ போல் 
வகை வகையாய்
வாசம் வீசுகிறாய்-வாகை போல்
சிரித்து சிரித்து சிவக்கிறாய் 
செவ்வானம் போல்-இருந்தும் 
பூமியில் தான் வாழ்கிறாய் 
கூட எனக்குள்ளும் வாழ்கிறாய் 
மேற்சொன்னதை விட ஒரு படி மேலாய்
எதுவென நீயே யூகித்துக்கொள்.....  
*********************************************************************

Saturday, September 17, 2011

நீ எனக்குளேநான் எனக்கே தெரியாமல்
உனக்குள்  தொலைந்து விட்டேன் 
நீ எதிர்படும் போதெல்லாம் 
புன்னகை மலர்கிறது-என்னையறியாமலே 
மீண்டும் உணர்கிறேன் என் விழி ஓரத்தில் 
கண்ணீர் துளி கசிகிறது-உனை பிரிதலின் துன்பமோ 
இல்லை பார்ததின் மகிழ்வோ தெரியவில்லை 
மீண்டும் நான் தொலைந்து போகாமல் இருக்க முயல்கிறேன் 
கொஞ்சம் கொஞ்சமாய் உனை பற்றி பேசுவதை குறைத்து கொள்கிறேன் 
சுருங்க சொல்ல வேண்டுமானால் உனை  பிடிக்கிறது- இருந்தும் 
வலி தாங்க பயம்-பிரிவின் வலி 
உன்மிதான அன்பு அது என்னோடே இரு(ற)ந்து விட்டு போகட்டும்....  
**********************************************************************************************

Saturday, September 10, 2011

தேவதை பிடித்தமும் பிடித்தல் நிமிர்த்தமும்(திணை: நேசம் )


நீ 
முகத்தையெல்லாம் மூடிக்கொண்டு 
கண்களால் மட்டும் சிரிப்பாயே 
அப்போது முகமூடி தேவதை 


மதிய நேரத்தில் 
தூக்ககலக்கத்தில் இங்கும் 
அங்குமாய் நடப்பாயே 
அப்போது தூங்குமூஞ்சி தேவதை 


எவரேனும் உனை குட்டை 
என்று சொல்லிவிட்டால் எக்கி 
எக்கி நெட்டை என்று சொல்வாயே 
அப்போது சின்ன தேவதை 

எதுவாயினும் சிரித்துகொண்டே இருப்பாயே 
அந்த செல்ல தேவதை மட்டுமே 
எனக்கு அதிகம் பிடிக்கும் 

எல்லோருக்கும் பேய் பிடிக்கும் 
எனக்கும் தேவதை பிடித்து விட்டதுபோல் 
தேவதை பிடித்து விட்டதோ-இல்லை 
தேவதையை எனக்கு பிடித்துவிட்டதோ 
தெரியவில்லை-நான் என்னையே அறியாமல் 

உனக்குள்ளே கரைந்து கொண்டிருக்கிறேன் போலும் 
தேவதை பிடித்தமும் பிடித்தல் நிமிர்த்தமும்
*********************************************************

Sunday, September 4, 2011

ஓர் பேருந்து பயணத்தில்எந்த ஒரு நெருடலும் இல்லாமல் 
இயல்பாய் வந்து அமர்கிறாள் 
ஒரு சில நிமிட தயக்கங்களுக்கு 
பிறகு-உரையாடல் தொடங்குகிறது 
எதை எதையோ பேசிக்கொண்டிருக்கிறோம் 
பயணத்தில் பொழுதைக்களிக்க பேசத்தொடங்கி 
இன்று பொழுதெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறோம் 
ஆம்-தனிமையான நெடுந்தூர பயணங்கள் 
நமக்கானவர்களை அடையாளப்படுத்துகிறது
அப்படி வாய்த்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்...
*************************************************************

Sunday, August 21, 2011

என் அந்தாதி(அந்தம்+ஆதி) பெண்..இதழ்கள்-உன் 

ஒரு துளி புன்னகையில் 
சிவந்த செங்காந்தள் மலர் 

செங்காந்தள் மலர் 
உன் அழகுடன் ஒப்பிடவே 
மலர்கின்ற ஓர் உன்னத படைப்பு 


படைப்பு- பிரம்மா அஸ்திரம் 
யாரோ சொல்ல கேட்டிருகிறேன் 
இன்று நான் பார்க்கிறேன் நீ, 
எத்தனை இதயங்களை- கொள்ளை 
                                               கொள்ள போகிறாயோ தெரியவில்லை 

தெரியவில்லை- இதுவரை 
கிறுக்கியது அந்தாதியா?
இருக்காது-என் எல்லா கனவிற்கும் 
ஆதியாய் இருக்கும் உன்னை பற்றியதே....
*************************************************************************

Tuesday, August 16, 2011

ஒவ்வொரு பொழுதும் உன்னோடு...எத்தனை பேர் இருந்தாலும் 
உன் வரவிற்காக காத்திருக்கும் விழிகள் 
எல்லோரின் வாழ்த்துக்கள் குவிந்தாலும் 
உன் வாழ்த்துக்காக ஏங்கி நிற்கும் இதயம் 
மற்றவரின் ஆறுதல்களை விட-உன் 
தோழ்களுக்காய் காத்துகிடக்கும் என் சோகம் 
உன்னுடைய ஒவ்வொரு குறுந்தகவல்கள் 
மின்னைஞ்சல் என எல்லாவற்றையும்
 சேமிக்கசொல்லும் என்காதல் -என எல்லா நினைவுகளும் 
என்னோடு சேர்ந்து இறந்தே போகட்டும் 
இப்படிதான் ஒவ்வொரு நாளும் நினைகிறேன் 
ஆனால் ஒவ்வொரு பொழுதும் உன்னோடு...
*******************************************************************************

Sunday, August 14, 2011

சுதந்திரம்சுதந்திரம் 
இங்கே அழகாய் மிளிர்கிறது 
சுதந்திர தின நாளன்று 
கொடுக்கப்படும் மிட்டாயிலும் 
அச்சடித்திருகிறார்கள்
Made in china
Made  in USA
*******************************************************

எனக்கான தோழி


என்றும் இல்லாது 

இன்று புதிதாய் தெரிகிறாள்
எதை கேட்டாலும் 
குறும்புத்தனமான பாவனைகள் 
மெல்லியதாய் ஒரு புன்னகை-இருப்பினும் 
என்னுள் முன்பிருந்தது போல் 
எந்தவித தாக்கங்களும் இல்லை 
அவள் எப்போதும் எனக்கான தோழி 
என்பது தெளிவாகிவிட்டது-நேற்று 
யாரோ ஒருவரின் தொலைபேசி அழைப்பில் 
அவள் முகத்தில் மலர்ந்த புன்னகையிலிருந்து....  
***********************************************************************

Friday, August 5, 2011

பிரிந்த நமக்குள் பிரியாமல் நீதினமும் ரணப்பட்டு கொண்டிருக்கிறேன்

உன் நினைவுகளிலிருந்து விடுபடமுடியாமல் 
எவருடன் பேசினாலும் நீயே நினைவுக்கு வருகிறாய் 
இருவரும் பேசி ஒரு வருடத்திற்கு மேலாகிறது-ஆனால் 
இன்றும் என்மனம் நினைக்கிறது-என் காதருகில் 
யாரோ என் பேரை சொல்லி அலைகிறார்கள் 
ஏன் சிரிக்காமல் இருக்கிறாய் 
ஏன் சேவ் செய்யவில்லை
ஒழுங்கா டிரஸ் பண்ணிட்டு போ-என்று 
சொல்கிறார்கள்-பிரிந்தவர்கள் வதைப்பதில்லை 
பிரிந்த நினைவுகளே வதைக்கிறது 
உடைந்த கண்ணாடித்துண்டில் உடையாமல் 
தெரியும் முகம் போலதான்-பிரிந்த 
நமக்குள் நீ இன்னும் பிரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்!...
******************************************

Wednesday, July 27, 2011

Lonely


The moments 
without you
days are dark
nights are blind..

Friday, July 22, 2011

நீ!நான் எதை செய்தாலும்
அதை அச்செடுத்தார் போல் 
அப்படியே செய்து காட்டுகிறாய்
அடி-நீ 
கண்ணாடி பெண்ணா!
இல்லை, 
கார்பன் பெண்ணா!
*******************************************************************

Sunday, July 3, 2011

நாங்கள் படித்த அகதிகள்............

 
அம்மா சொல்கிறாள்,
நாளை தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்க வராங்க
மின்னைஞ்சல் அழைப்பு வருகிறது,
என்னோட பள்ளிகூட நண்பனுக்கு நாளை திருமணம்
என் அக்காவின் குழந்தை நடக்கிறதாம்
எங்கள் பாட்டி கடந்த மாதம் காலமானார்-இப்படி
சந்தோilஷம்,துக்கம், கனவுகள்-என எல்லாவற்றையும்
மின்னைஞ்சல் வாயிலாக மட்டுமே பகிர்ந்து கொள்ள
முடிந்த நாங்கள் படித்த அகதிகள்............
     *************************************************************

Wednesday, June 22, 2011

இன்பாக்சில்.......மொபைல் போனின்

இன்பாக்சில் மட்டுமல்ல-என் 
இதய இன்பாச்சிலும் 
நிறைந்திருகிறது 
உன் நினைவுகள் 
*********************************************

Tuesday, June 21, 2011

பிரிவுகள்பிரிவுகள் 
இல்லாத காதல் என்று
 உலகில் எதுவுமே இல்லை-காரணம்
 பிரிவில் தான் ஊடல் பிறக்கும்....

Monday, June 13, 2011

அருவிநிற்கையில் உடலை நனைகிறாள் 
நினைக்கையில் நெஞ்சம் நிறைக்கிறாள் 
***************************************************************

Monday, June 6, 2011

மழை சொன்னதுஒவ்வொரு மழைத்துளியும் 
என் மீது விழும் போதும்-நான் 
மழைத்துளி அழகென்று சொன்னேன் 
அதே உன் மீது விழும் போது 
உன்னை அழகியென்று சொன்னது
மழைக்கு தெரிந்திருகிறது எந்தொரு 
மழலையும் அழகாய் இருக்குமென்று...
***********************************************************

Sunday, June 5, 2011

தோழி காதலியாகிறாள்


தினம் தினம் உன்னை 
வழியனுப்பிவிட்டு தனியாகத்தான் 
என் அறைக்கு வந்திருகிறேன் 
இன்று மட்டும் ஓர் தனிமையை 
உணர்கிறேன்-உன்னிடம் இருந்து 
வரும் ஒவ்வொரு குறுந்தகவல்களுக்கும் 
ஓர் புன்னகை உதிக்கிறது-நீ 
தினமும் எனக்கு புதிதாய் தெரிகிறாய் 
தோழி காதலியாகிறாள்............................  

Saturday, June 4, 2011

உன் நினைவுகளுக்கு பதிலாய்.


Friday, June 3, 2011

காதல்-நட்பு
முழுமையான ஆண்-பெண் 
நட்பிலும் ஒரு நொடி 
காதல் மலர்கிறது-ஆம் 
அவளது சிறு சிறு குறும்பு சேட்டைகளில் 
அவனது ஒரு சில விநாடி அக்கறையில்
மலர்ந்து மடிகிறது-காரணம் 
உன்னதமான நட்பை ஒருபோதும் 
கலங்க படுத்தகூடாது என்கிற மரபில் 
காதல்-நட்பு இரண்டுமே கைக்குழந்தை தான் 
காயப்படுவது எவரேனும் அழுவது இவர்கள்தான்... 
**********************************************************************************

Monday, May 30, 2011

உலகம்
காதலிக்க ஒரு தோழி 

கலந்துரையாட ஒரு நண்பன் 
கரைந்து போக சில நினைவுகள் 
இவைமட்டுமே வாழ போதுமெனில் 
உலகம் இயந்திரமயமாய் மாறி இருக்காது...
*****************************************************

Saturday, May 28, 2011

நிலாநடுக்கம்
அடிக்கடி உன் வீட்டு கண்ணாடியின் 

எதிரே போய் நிற்காதே 
உடைந்து விட போகிறது 
உன் அழகின் அதிர்வால் 
இது நிலநடுக்கம் இல்லை 
நிலாநடுக்கம்...
********************************************************************************

Sunday, May 22, 2011

ஒரு முறை காதலித்து பார்க்கணும்
உன்னை 
மறந்தவனும் கொடுத்துவைத்தவன் 
மணந்தவனும் கொடுத்துவைத்தவன் 
நினைத்தவன் தான் பாவம் 
மறக்கவும் முடியாமல் 
மணக்கவும் முடியாமல் 
மடிந்து கொண்டிருக்கிறான் 
எல்லோரும் ஒரு முறை காதலித்து 
பார்க்கணும்-அப்போதுதான் உணரும் 
காத்திருக்கையில் சுகம் 
கடிந்துகொள்கையில் ஊடல் 
உறங்குகையில் உரையாடல் 
பிரிகையில் மரணம்....
***************************************************************************

Wednesday, May 18, 2011

நீ சிரிப்பழகி மட்டும் அல்ல
எல்லோரும் சிரிக்கும் போது
மட்டும்  அழகாய் இருப்பார்கள்
என் நினைத்தேன்-ஆனால் நீ
அழும் போதும் அழகாய் இருக்கிறாய்
அதற்காக எப்போதும் அழுதுகொண்டிருக்காதே
சிதைந்துவிடும் என் மனம்
நீ சிரிப்பழகி மட்டும் அல்ல 
********************************************

Friday, May 6, 2011

பயணம்-உங்களோடு......மிக அருகில் சாரல் மழை 

சாலையெல்லாம் உன் முகம் 
**************

ஒவ்வொரு நாள் இரவும் 

ஓர் நிலா உதயமாகிறது 
ஓர் நிலா மறைகிறது 
நீ வீடுநோக்கி போகிறாய்
***************** 

வெகு தொலைவில் பறக்கிறது
ஒரு பறவை-அதன் 
குரல் மட்டும் என் மனதில் 
உன் காதல்
******************** 

எல்லா பூக்களும் 
மணத்தை கொடுத்து 
மனதை கொள்ளையடிக்கிறது 
ஒரு பூ மட்டும் மனதை கொடுத்து 
மனதை கொள்ளையடிக்கிறது -நீ
********************* 

எத்தனை முறை அழைத்தாலும் 
உன் பெயர் மட்டும் வாடாமல் 
மனம் வீசிக்கொண்டே இருக்கிறது 
பூவரசி.
***********************************************************


புத்தன் தேசம் 
கால் வைக்க பயம் 
தியானத்தில் கன்னி வெடிகள் 
***********************************************************

உன் கண்களும் மன்னிக்கிறதுஎத்தனை முறை நான் 
கோபப்பட்டு உன் மீது 
எரிந்து விழுந்தாலும் 
அத்துணை முறையும் 
நீ கண்களால் சிரிக்கிறாய் 
இதயம் மட்டுமே மன்னிக்கமுடியும் 
என நினைத்தேன்-ஆனால் 
உன் கண்களும் மன்னிக்கிறது...
**********************************************************

Monday, May 2, 2011

நீ எனக்கு -நான் உனக்குநாம் காதலிக்கையில் 
நீ நினைக்கும் போதும் 
உன் இதயத்திற்கு எட்டிவிடும்
 தொலைவில் இருப்பேன் 

ஆனால் இப்போது இருவரின்  இதயமும் 
எட்டிவிடும் தொலைவில் இல்லை 
திருமணமாகி பத்து வருடமாகிறது 
நீ எனக்கு -நான் 
உனக்கு குழந்தை 
இருவருமே இதயமாகவே இருக்கிறோம்..

***********************************************************

Sunday, May 1, 2011

என் பார்வையில்என் பார்வையில் 
அத்தனை கோடி  அழகும்
 உன்னிடத்தில்-தாயழகு
செங்காந்தல் மலரழகு 
கார்மேக கண்ணழகு 
ஜீவநதி குரலழகு 
இது என் பார்வைக்குறைபாடோ இல்லை 
உன் அழகின் வெளிப்பாடோ என்று தெரியவில்லை 
என் மனம் சொல்கிறது உன் அழகின் வெளிப்பாடு என்று 
மனிதர்களை பார்க்கும் போது தான்-பார்வைக்குறைபாடு 
பிரதிபலிக்கும்-நீ தான் தேவதை ஆயிற்றே!...
*******************************************************************************

Friday, April 29, 2011

உனக்காய்-இதை தவிற
நீ 

சொன்ன படி 
உன்னை நினைக்க மறுத்தால் 
என் இதயம் துடிக்க மறுக்கிறது
ஏன் என்று கேட்டால் இதயம் சொல்கிறது 
உன் சுவாசக்காற்றில் தலை சாய்கிறேன்
உன் சுவாசக்கூட்டில் இளைப்பாருகிறேன்   
கொஞ்சம் கொஞ்சம் நம் காதல் வெட்கம் கொள்ள 
விடைபெற மறுத்து மனமின்றி விடை பெற்றோம் 
நேற்றைய கனவில்...பிறகு இன்றெப்படி உனை மறக்க
நீ சொல்லி  எதையுமே மறுத்ததில்லை என் இதயம் 
உனக்காய்-இதை தவிற 
இன்று மட்டும் எனக்காய் துடிக்கிறது என் இதயம் 
அதுவும் உன் நினைவுகளுக்காய்... 
*************************************************************

Thursday, April 7, 2011

ஒரு மலர் இரு வாசம்!பட்டாம்பூச்சி,
பழப்பூச்சி என 
இரண்டையுமே 
உனக்குள் வைத்திருக்கிறாய் 
ஓ! எப்படி என கேட்கிறாயா
உன் பார்வையில் வண்ணம் சேர்கிறாய் 
புன்னகையில் வாசம் வீசுகிறாய்
ஒரு மலர் இரு வாசம்!...
*********************************************

Saturday, March 12, 2011

பொது உடைமை- சுயநலம்

கொட்டுகிறது மழை 
நிரம்பிவழிகிறது 
ஏழை வீட்டு குடம் 
பொது உடைமை 

கொட்டுகிறது மழை 
நிரம்பிவழிகிறது 
ஏழை வீட்டு குடம் 
சிதலமடைந்த வீடு
சுயநலம் 

பொது உடைமை-சுயநலம்
இரண்டிற்கும் ஒருநூல் அளவுதான்.. 

ஓர் விழா நாளில்

                                                                                         
ஓர் விழா நாளில் 
                                                                வண்ண வண்ண 

ஊர்திகள் வலம் போக 
இங்கும் அங்குமாய் 
ஓடிகொண்டிருந்தது 
ஓர் ஒற்றை ரோஜா 
இடை இடையே 
வந்து வழி மறைக்கிறாள் 
இதயம் பறிகிறாள் 
பின்தொடர்கிறேன்; பறிகொடுத்தேன் 
மெல்ல மெல்ல உன் நினைவுகள் 
என்னை ஆட்கொள்கிறது 
ரணப்பட்டுபோகிறேன்-நீ 
கிடைக்கவில்லை என்பதற்காக அல்ல 
உன் அன்பு என் காதலுக்கு
கிடைக்கவில்லை என்பதற்காக.....
***************************************************************
(இது நான் உணர்ந்த ஓர் உணர்வு )

Thursday, March 10, 2011

உன் பெயரில் உயிர்எல்லா பெயரிலும் 
உயிர்-மெய் எழுத்து 
சேர்ந்தே இருக்கும்-ஆனால் 
உன் பெயரில் உயிரெழுத்து
 மட்டும் இருக்கிறதோ-ஆம் 
உன் பெயரை சொல்லிக்கொண்டே 
என் காதல் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது
*******************************************************************************

Wednesday, March 2, 2011

நெருஞ்சிமுள்மலர்ந்திருக்கிறேன்  
நெருஞ்சிமுட்கலாய்
மாறிவிடுகிறேன் 
மலரென-உன் 
பாதம் படுமானால்
தேவதை வருகை-நெருஞ்சிமுள் கூற்று 
**************************************************************************

Monday, February 28, 2011

என் கனவு காக்கும் தேவதை
நான் 
சிரித்து, மகிழ்ந்த 
ஒவ்வொரு வினாடிகளும்-உன்னால் 
களவாடப்பட்ட பொழுதுகள் தான் 
களவு கொடுத்துவிட்டோம் என்ற  
ஏக்கம்  ஒரு நாளும் இருந்ததில்லை 
ஆம் -அவை அனைத்தும் 
உனக்கான நிமிடங்கள்-நீ 
என் கனவு காக்கும் தேவதை!..
**********************************************

Thursday, February 24, 2011

செல்வி நாளை திருமதி...
நான் சிறிது சிறிதாய் 
எனை இழந்து கொண்டிருகிறேன் 
உணரமுடியாத வலிகள் 
உறங்கத் துடிக்கின்ற விழிகள் 
உறங்க மறுக்கின்ற மனம் 
புழுதி படிந்து போன 
நினைவுகள் எல்லாம் 
உயிர் பெற்றுவிட்டன..
உருவற்று போன வார்த்தைகள் 
உயிர்பெற துடிக்கும் சுவாசப்பைகள்
நாளை என் இதயத்திற்கு மரணம் 
இல்லையெனில் இப்படியும் வைத்துகொள்ளலாம் 
செல்வி நாளை திருமதி....
**************************************************************************************************

Wednesday, February 23, 2011

சதை பிண்டங்களாகவே

எல்லோரும் சதை பிண்டங்களாகவே 
வாழ்ந்து கொண்டிருக்கிறோம் 
இதயத்தையும் உணர்வுகளையும் 
ஏதோ ஒரு வினாடியில் 
ஒரு வலியில் தொலைத்து விடுகிறோம்!..
ஆம் ரசிக்க ஒருமனம்; வெறுக்க ஒரு மனம்

Saturday, February 12, 2011

முடிந்த வரை


முடிந்த வரை 
கண்களோடு பேச 
கற்றுக் கொள்ளுங்கள் -அப்பொழுதுதான்
 உண்மையான அன்பை ஸ்பரிசிக்க முடியும் 

முடிந்த வரை 
தனிமையை 
நேசிக்க பழகுங்கள்-அப்பொழுதுதான்
பிரிவுகளில் பக்குவப்பட முடியும் 

 முடிந்த வரை 
தினம் தினம் நினைவுகளால் 
பிறந்து கொண்டே இருப்போம்
அப்பொழுதுதான் வாழ்க்கையை 
புதிதாய் ரசிக்க முடியம்..

*******************************************************************************

Saturday, January 29, 2011

மலர்கிறேன்


நான்
மீண்டும் மலர்கிறேன்
புதிய கனவுகள்
புதிய எழுதுகோல்
இருந்தும் அதே
ரசிகனாய்-இனி
தினம் தினம் ரசிப்போம்!....
*******************************************
^ Scroll to Top