நான் உனை பார்க்கும் பொழுதெல்லாம்
மனதில் பதிகிறாய்-மருதாணி போல்
வாடாமல் மலர்கிறாய்-காகிதப்பூ போல்
வகை வகையாய்
வாசம் வீசுகிறாய்-வாகை போல்
சிரித்து சிரித்து சிவக்கிறாய்
செவ்வானம் போல்-இருந்தும்
பூமியில் தான் வாழ்கிறாய்
கூட எனக்குள்ளும் வாழ்கிறாய்
மேற்சொன்னதை விட ஒரு படி மேலாய்
எதுவென நீயே யூகித்துக்கொள்.....
*********************************************************************
No comments:
Post a Comment