இதழ்கள்-உன்
ஒரு துளி புன்னகையில்
சிவந்த செங்காந்தள் மலர்
செங்காந்தள் மலர்
உன் அழகுடன் ஒப்பிடவே
மலர்கின்ற ஓர் உன்னத படைப்பு
படைப்பு- பிரம்மா அஸ்திரம்
யாரோ சொல்ல கேட்டிருகிறேன்
இன்று நான் பார்க்கிறேன் நீ,
எத்தனை இதயங்களை- கொள்ளை
கொள்ள போகிறாயோ தெரியவில்லை தெரியவில்லை- இதுவரை
கிறுக்கியது அந்தாதியா?
இருக்காது-என் எல்லா கனவிற்கும்
ஆதியாய் இருக்கும் உன்னை பற்றியதே....
*************************************************************************
நல்ல கவிதை.
ReplyDeleteபடங்களும் அருமை.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html
தங்கள் கருத்துக்கு நன்றி
ReplyDeleteஅன்பின் ரஞ்சித் - அந்தாதி அருமை - படங்களும் பளிச்சென்று நன்றாக இருக்கின்றன. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா .
ReplyDeleteதொடருங்கள் ,,,
ReplyDeleteவாழ்த்துக்கள்.
தங்கள் கருத்துக்கு நன்றி
ReplyDeleteவிமர்சனங்கள் உண்டாக்கப்படுவதாலே
ReplyDeleteநல்ல படைப்பு உண்டாகும் என்ற நம்பிக்கையில்.....
உன் அந்தாதி முயற்சி இன்னும் கொஞ்சம்
சுவயோடிருந்திருக்கலாம்.......
ஒன்றை மட்டும் மனதில் கொள்க....
"உன் போன்ற சாமியார்கள்
தமிழ் கடவுளின் அருகே போய் வரும்
பாக்கியவான்கள்"
உங்களாலே எங்களுக்கும் தமிழுக்கும் உள்ள
இணைப்பு இழுபறியின்றி நிகழ்ந்து கொண்டிருக்கிறது....
சத்தியமாய் என்னை போன்றோரால்
இது போல் எழுத இயலாது
விமர்சிப்பது கொண்டு ஒரு நல்ல படைப்பு
உருவாகும் என்ற நம்பிக்கை உண்டு....
மலர் என்று முடித்து விட்டு செங்கந்தால் என்ற தொடக்கம் ஏன் ?
செங்கந்தால் மலர் ஒற்றை வார்த்தையா?
மலரை இதழுக்கும் உவமை படுத்திவிட்டு
அடுத்த வரியில் மொத்தமும் வர்ணிப்பது ஏன் ?
அஸ்திரம் கொல்லத்தானே?
கொள்ளை ஏன் போகிறது ?
உங்களின் அத்தனை கேள்விகளும் உண்மை.. அதனால் தான் கடைசியாய் எதுதிவிட்டேன் ''தெரியவில்லை- இதுவரை கிறுக்கியது அந்தாதியா? இருக்காது-என் எல்லா கனவிற்கும் யாய் இருக்கும் உன்னை பற்றியதே''.... ஒரு பெண்ணை மட்டுமே அந்தாதி எடுத்து கொண்டேன் தலைப்பிலும் என் அந்தாதி (அந்தம்+ஆதி)பெண் என்று குறிப்பிட்டேன். நிச்சயமாய் தமிழ் இலக்கணம் படி இது தவறான அந்தாதி தான். அடுத்தமுறை முயற்சிக்கிறேன். நல்ல விமர்சனம் நான் எதிர்பார்த்தது போல்
ReplyDelete