மிக அருகில் சாரல் மழை
சாலையெல்லாம் உன் முகம்
**************
**************
ஒவ்வொரு நாள் இரவும்
ஓர் நிலா உதயமாகிறது
ஓர் நிலா மறைகிறது
நீ வீடுநோக்கி போகிறாய்
*****************
*****************
வெகு தொலைவில் பறக்கிறது
ஒரு பறவை-அதன்
குரல் மட்டும் என் மனதில்
உன் காதல்
********************
********************
எல்லா பூக்களும்
மணத்தை கொடுத்து
மனதை கொள்ளையடிக்கிறது
ஒரு பூ மட்டும் மனதை கொடுத்து
மனதை கொள்ளையடிக்கிறது -நீ
*********************
*********************
எத்தனை முறை அழைத்தாலும்
உன் பெயர் மட்டும் வாடாமல்
மனம் வீசிக்கொண்டே இருக்கிறது
பூவரசி.
தலை வணங்குகிறேன் உந்தன் தமிழுக்கு.....
ReplyDeleteextremely superb..........
Thanks for your Comments
ReplyDeletesuperb machan....................
ReplyDelete