Tuesday, September 20, 2011

நீயே யூகித்துக்கொள்.....



நான் உனை பார்க்கும் பொழுதெல்லாம் 
மனதில் பதிகிறாய்-மருதாணி போல் 
வாடாமல் மலர்கிறாய்-காகிதப்பூ போல் 
வகை வகையாய்
வாசம் வீசுகிறாய்-வாகை போல்
சிரித்து சிரித்து சிவக்கிறாய் 
செவ்வானம் போல்-இருந்தும் 
பூமியில் தான் வாழ்கிறாய் 
கூட எனக்குள்ளும் வாழ்கிறாய் 
மேற்சொன்னதை விட ஒரு படி மேலாய்
எதுவென நீயே யூகித்துக்கொள்.....  
*********************************************************************

Saturday, September 17, 2011

நீ எனக்குளே



நான் எனக்கே தெரியாமல்
உனக்குள்  தொலைந்து விட்டேன் 
நீ எதிர்படும் போதெல்லாம் 
புன்னகை மலர்கிறது-என்னையறியாமலே 
மீண்டும் உணர்கிறேன் என் விழி ஓரத்தில் 
கண்ணீர் துளி கசிகிறது-உனை பிரிதலின் துன்பமோ 
இல்லை பார்ததின் மகிழ்வோ தெரியவில்லை 
மீண்டும் நான் தொலைந்து போகாமல் இருக்க முயல்கிறேன் 
கொஞ்சம் கொஞ்சமாய் உனை பற்றி பேசுவதை குறைத்து கொள்கிறேன் 
சுருங்க சொல்ல வேண்டுமானால் உனை  பிடிக்கிறது- இருந்தும் 
வலி தாங்க பயம்-பிரிவின் வலி 
உன்மிதான அன்பு அது என்னோடே இரு(ற)ந்து விட்டு போகட்டும்....  
**********************************************************************************************

Saturday, September 10, 2011

தேவதை பிடித்தமும் பிடித்தல் நிமிர்த்தமும்(திணை: நேசம் )


நீ 
முகத்தையெல்லாம் மூடிக்கொண்டு 
கண்களால் மட்டும் சிரிப்பாயே 
அப்போது முகமூடி தேவதை 


மதிய நேரத்தில் 
தூக்ககலக்கத்தில் இங்கும் 
அங்குமாய் நடப்பாயே 
அப்போது தூங்குமூஞ்சி தேவதை 


எவரேனும் உனை குட்டை 
என்று சொல்லிவிட்டால் எக்கி 
எக்கி நெட்டை என்று சொல்வாயே 
அப்போது சின்ன தேவதை 

எதுவாயினும் சிரித்துகொண்டே இருப்பாயே 
அந்த செல்ல தேவதை மட்டுமே 
எனக்கு அதிகம் பிடிக்கும் 

எல்லோருக்கும் பேய் பிடிக்கும் 
எனக்கும் தேவதை பிடித்து விட்டதுபோல் 
தேவதை பிடித்து விட்டதோ-இல்லை 
தேவதையை எனக்கு பிடித்துவிட்டதோ 
தெரியவில்லை-நான் என்னையே அறியாமல் 

உனக்குள்ளே கரைந்து கொண்டிருக்கிறேன் போலும் 
தேவதை பிடித்தமும் பிடித்தல் நிமிர்த்தமும்
*********************************************************

Sunday, September 4, 2011

ஓர் பேருந்து பயணத்தில்



எந்த ஒரு நெருடலும் இல்லாமல் 
இயல்பாய் வந்து அமர்கிறாள் 
ஒரு சில நிமிட தயக்கங்களுக்கு 
பிறகு-உரையாடல் தொடங்குகிறது 
எதை எதையோ பேசிக்கொண்டிருக்கிறோம் 
பயணத்தில் பொழுதைக்களிக்க பேசத்தொடங்கி 
இன்று பொழுதெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறோம் 
ஆம்-தனிமையான நெடுந்தூர பயணங்கள் 
நமக்கானவர்களை அடையாளப்படுத்துகிறது
அப்படி வாய்த்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்...
*************************************************************

Free Backlinks