Sunday, August 21, 2011

என் அந்தாதி(அந்தம்+ஆதி) பெண்..



இதழ்கள்-உன் 

ஒரு துளி புன்னகையில் 
சிவந்த செங்காந்தள் மலர் 

செங்காந்தள் மலர் 
உன் அழகுடன் ஒப்பிடவே 
மலர்கின்ற ஓர் உன்னத படைப்பு 


படைப்பு- பிரம்மா அஸ்திரம் 
யாரோ சொல்ல கேட்டிருகிறேன் 
இன்று நான் பார்க்கிறேன் நீ, 
எத்தனை இதயங்களை- கொள்ளை 
                                               கொள்ள போகிறாயோ தெரியவில்லை 

தெரியவில்லை- இதுவரை 
கிறுக்கியது அந்தாதியா?
இருக்காது-என் எல்லா கனவிற்கும் 
ஆதியாய் இருக்கும் உன்னை பற்றியதே....
*************************************************************************

Tuesday, August 16, 2011

ஒவ்வொரு பொழுதும் உன்னோடு...



எத்தனை பேர் இருந்தாலும் 
உன் வரவிற்காக காத்திருக்கும் விழிகள் 
எல்லோரின் வாழ்த்துக்கள் குவிந்தாலும் 
உன் வாழ்த்துக்காக ஏங்கி நிற்கும் இதயம் 
மற்றவரின் ஆறுதல்களை விட-உன் 
தோழ்களுக்காய் காத்துகிடக்கும் என் சோகம் 
உன்னுடைய ஒவ்வொரு குறுந்தகவல்கள் 
மின்னைஞ்சல் என எல்லாவற்றையும்
 சேமிக்கசொல்லும் என்காதல் -என எல்லா நினைவுகளும் 
என்னோடு சேர்ந்து இறந்தே போகட்டும் 
இப்படிதான் ஒவ்வொரு நாளும் நினைகிறேன் 
ஆனால் ஒவ்வொரு பொழுதும் உன்னோடு...
*******************************************************************************

Sunday, August 14, 2011

சுதந்திரம்



சுதந்திரம் 
இங்கே அழகாய் மிளிர்கிறது 
சுதந்திர தின நாளன்று 
கொடுக்கப்படும் மிட்டாயிலும் 
அச்சடித்திருகிறார்கள்
Made in china
Made  in USA
*******************************************************

எனக்கான தோழி


என்றும் இல்லாது 

இன்று புதிதாய் தெரிகிறாள்
எதை கேட்டாலும் 
குறும்புத்தனமான பாவனைகள் 
மெல்லியதாய் ஒரு புன்னகை-இருப்பினும் 
என்னுள் முன்பிருந்தது போல் 
எந்தவித தாக்கங்களும் இல்லை 
அவள் எப்போதும் எனக்கான தோழி 
என்பது தெளிவாகிவிட்டது-நேற்று 
யாரோ ஒருவரின் தொலைபேசி அழைப்பில் 
அவள் முகத்தில் மலர்ந்த புன்னகையிலிருந்து....  
***********************************************************************

Friday, August 5, 2011

பிரிந்த நமக்குள் பிரியாமல் நீ



தினமும் ரணப்பட்டு கொண்டிருக்கிறேன்

உன் நினைவுகளிலிருந்து விடுபடமுடியாமல் 
எவருடன் பேசினாலும் நீயே நினைவுக்கு வருகிறாய் 
இருவரும் பேசி ஒரு வருடத்திற்கு மேலாகிறது-ஆனால் 
இன்றும் என்மனம் நினைக்கிறது-என் காதருகில் 
யாரோ என் பேரை சொல்லி அலைகிறார்கள் 
ஏன் சிரிக்காமல் இருக்கிறாய் 
ஏன் சேவ் செய்யவில்லை
ஒழுங்கா டிரஸ் பண்ணிட்டு போ-என்று 
சொல்கிறார்கள்-பிரிந்தவர்கள் வதைப்பதில்லை 
பிரிந்த நினைவுகளே வதைக்கிறது 
உடைந்த கண்ணாடித்துண்டில் உடையாமல் 
தெரியும் முகம் போலதான்-பிரிந்த 
நமக்குள் நீ இன்னும் பிரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்!...
******************************************
Free Backlinks