கருவறுப்புகள்
கறுப்பு துணி ஆர்ப்பாட்டங்கள்
என பாழாய்போனது
ஈழ நாடு
நாம் பண்பட்டு விட்டோம்
என்று சொல்லிக்கொள்வது
வெட்கக்கேடு-என்று தான்
முற்றுப்பெற போகிறதோ
மேடைச்சொல் விடுதலை
ஒவ்வொரு தேசமாய்
எரிந்து கொண்டிருக்கட்டும்
இன்று அதில் குளிர் காய்ந்துகொள்ளுங்கள்
நாளை என்னைப்போல் ஒருவன் வருவான்
அவன் விதைப்பான் பூமியில்
கன்னிவெடிகளை அல்ல அழகிய காதலை
அப்போது எங்கள் பூமி அழகாய் மிளிரும்!...
******************************************************************************************************
No comments:
Post a Comment