Thursday, November 14, 2019


பிரம்மன் கொடுத்த
அழகையெல்லாம்
உன் கண்களிலும் 
கன்னக்குழிகளிலும் 
சேமித்துக்கொண்டு
எனை காணும்போதெல்லாம் 
சிறிது சிறிதாய்
சிந்திவிட்டு செல்கிறாய்!...
                                                      --- ரஞ்சித் 


Monday, November 11, 2019


ஒவ்வொரு முறையும்
கைபேசி வாயிலாக
உன் அம்மாவிடம்
உன் அசைவுகளை
கேட்டறியும்போதெல்லம்
நான் மீள் செல்லமுடியா
என் கருவறை நாட்களுக்கு
சென்று சேர்கிறேன்
உன்னோடு சேர்ந்து விளையாட !..
                                                                            -- ரஞ்சித் 
Free Backlinks