Tuesday, August 1, 2017

நெடுவாசல் என்கிற எங்கள் கதிராமங்கலம்


நேற்று 
எங்கள் பூமிமேல்
வழிந்தோடிய 
காவிரியையும் 
விளைந்தாடிய 
பொன்னியையும்
காப்பாற்ற தவறிய 
புண்ணியவான்கள் 
இன்று,
எம் பூமிக்கடியிலிருக்கும் 
கார்பனுக்கும் 
கனிமத்திற்காகவும்
சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்
கேட்டால் பொதுவுடைமையாம்!
இந்நிலை நீடித்தால்-நாளை
இவர்களுக்கான வாய்க்கரிசியும்
வான்வழி இறக்குமதி செய்யவேண்டும்
என்பதை என்றுணர்வார்களோ?..
சற்றே சிந்திப்போம்!...

No comments:

Post a Comment

Free Backlinks