Thursday, August 31, 2017

முத்துக்குளிக்கிறேன்


பாவை நீ!
நொடிக்கு இருமுறை 
கண்சிமிட்டுகையில் 
மூச்சடக்காமலே 
முத்துக்குளிக்கிறேன் நான்..
                                                     --- ரஞ்சித் 


பிறையில்லா வானம்
அமைதியாய் -ஆயினும்
நீயில்லா நினைவ(லி)லைகளை 
உரக்கச்சொல்கிறது!..
                                         -- ரஞ்சித் 
                          

Thursday, August 3, 2017

மனம் தொட்ட கவிதை


என்
நன்பனுடனான உரையாடலின்
நடுவே என்னிடம் கேட்டான்
உன் வாசிப்பில்
புதிராயிருந்தும்
அதிகம் ரசிக்கவைத்த
ஆச்சரியப்படுத்திய
கவிதை எதுவென்று கேட்டான்
நான் சற்றும் யோசிக்காமல்
உன் பெயிரை சொல்லிவிட்டேன்
ஆம்,
நான் அதிகம் ரசித்து
அதிசியக்கும் கவிதை நீ மட்டுமே!...

Tuesday, August 1, 2017

நெடுவாசல் என்கிற எங்கள் கதிராமங்கலம்


நேற்று 
எங்கள் பூமிமேல்
வழிந்தோடிய 
காவிரியையும் 
விளைந்தாடிய 
பொன்னியையும்
காப்பாற்ற தவறிய 
புண்ணியவான்கள் 
இன்று,
எம் பூமிக்கடியிலிருக்கும் 
கார்பனுக்கும் 
கனிமத்திற்காகவும்
சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்
கேட்டால் பொதுவுடைமையாம்!
இந்நிலை நீடித்தால்-நாளை
இவர்களுக்கான வாய்க்கரிசியும்
வான்வழி இறக்குமதி செய்யவேண்டும்
என்பதை என்றுணர்வார்களோ?..
சற்றே சிந்திப்போம்!...

Free Backlinks