இப்போதும்
உன்னுடன்
உரையாடிய
மின்னஞ்சல்களை திறக்கையில்
என்னையும் என் நலன்களையும்
பற்றிச் சிந்தித்த - ஓர் இதயத்தின்
துடிப்புகளை உணரமுடிகிறது
கூடவே,
எப்போதாவது உனை மீண்டும்
பார்த்துவிடமாட்டோமா என்கிற
ஏக்க அலைகளும் அதிகமாகிவிடுகிறது
சிலரது அன்பும் அதன் தொடர்ச்சியான
இழப்புகளும்
எவ்வெனும் ஈடுசெய்ய முடியாதவையே!..
No comments:
Post a Comment