Saturday, January 30, 2010

அகத்தின் அழகு....




அகத்தின் அழகு

கண்ணாடியில்
எப்போதெல்லாம்
முகம் பார்க்கிறேனோ
அப்போதெல்லாம்
நீ மட்டுமே
என் நினைவுக்கு வருகிறாய்!.
ஆம் இருக்காதா என்ன?
அகத்தின் அழகு
முகத்தில் தெரியுமாமே,
என் அகத்தில் இருப்பது
நீ அல்லவா!...

Friday, January 22, 2010

??????....


எல்லோரும் ஏதோ ஒன்றை
தொலைக்கத்தான் பிறந்திருக்கிறோம்
சில காலம்
காதலில்,
ஏனோ அதற்குமட்டும்
இதயம் அழுவதில்லை...
ஒருவேளை வலிகளை
உணருவதற்கு இதயம்
தன்னிடம் இல்லை என்பாதாலா!...
இருந்தாலும் இருக்கும்..

Monday, January 11, 2010

இதயம் பறிபோனதே!...




இதயம் பறிபோனதே!...

நீரின் சல சலப்புகளுக்கு
ஈடு கொடுக்க முடியாமல்
மூழ்கிப்போகும்
ஓடத்தைப்போலத்தான்,
என் மனமும்
உன் சலனப்பார்வைகளுக்கு
இல்லை இல்லை
சலனமடையச் செய்யும்
பார்வைகளுக்கு இணங்கி
தொலைந்தே போகிறது...
Free Backlinks