Sunday, September 10, 2017


நீ
எனைவிட்டு
விலகிச்
செல்லும்போதெல்லாம்
தொலைதூரக்கல்வியில்
காதலை கற்றுத்தருகிறாய்!...
                                                                --- ரஞ்சித் 

Friday, September 8, 2017


என்
வண்ணத்துப்பூச்சி
நீ!
இல்லா நேரம்
போகும் பாதையெங்கும்
உன் எண்ணங்களை
பரப்பிச்செல்லும்
எண்ணத்துப்பூச்சி
ஆகிறேன் நான்!...
                                    ---ரஞ்சித்             

Thursday, September 7, 2017



என் தோல்வியின்
தருணங்களில் - நீ
என்னை அரவணைக்கையில்
சிறகு குவித்து
துயில்கொள்ளும்
பறவையாகிறேன் நான்!..
                                                   --- ரஞ்சித் 

Friday, September 1, 2017



வண்ணத்துப்பூச்சிகளின்
வாள்சண்டைக்கு
ஆட்பட்டு போகிறேன்
ஒவ்வொருமுறையும்
உன்னுடன்
பூங்காவிற்கு செல்லும்போதும்
தங்களை விட ஓர்
அழகியை
அழைத்து வந்தேனென்று!..
                                                       --- ரஞ்சித் 
Free Backlinks