RANJITH POEMS
Monday, November 13, 2017
வான் மழையில்
நனையாமலிருக்க
குடை விரித்தேன்
புன்னகைத்தாய் நீ!
நனைந்தேன் நான்
குடைக்குள்ளேயே!...
-- ரஞ்சித்
Saturday, November 11, 2017
நான்
உனை
பார்பதை அறிந்ததும்
உன் கன்னக்குழிகள்
பிரசவிக்கின்றன
என் மீதான வெட்கத்தை!...
-- ரஞ்சித்
உன்னை
என் அம்மாவிடம்
அறிமுகம் செய்ய
அழைத்துப்போகையில்
நீ சிந்திய
வெட்கச்சாரல்களெல்லாம்
இன்று நம் திருமணத்தில்
பூக்களாய் அலங்கரிக்கின்றன!..
--ரஞ்சித்
Sunday, September 10, 2017
நீ
எனைவிட்டு
விலகிச்
செல்லும்போதெல்லாம்
தொலைதூரக்கல்வியில்
காதலை கற்றுத்தருகிறாய்!...
--- ரஞ்சித்
Friday, September 8, 2017
என்
வண்ணத்துப்பூச்சி
நீ!
இல்லா நேரம்
போகும் பாதையெங்கும்
உன் எண்ணங்களை
பரப்பிச்செல்லும்
எண்ணத்துப்பூச்சி
ஆகிறேன் நான்!...
---ரஞ்சித்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)