Wednesday, July 14, 2010

போகலாம்....
எதிர்பார்ப்புகள் என்று 
ஏதும் இல்லை 
விழிகளில் ஈரம் இன்னும் காயவில்லை 
வந்த வழியே போகின்றோம் 
நின்று ரசிக்க இனி நிஜங்கள் இல்லை 
நினைவுகளை தவிற 
வந்த வழியே போகின்றோம் 
கொள்ளை கொண்ட 
ஒரு சில நட்பு, 
இதயம்,
புன்னகை,
கண்ணீர்,
வெற்றிகள்,
விமர்சிப்புகள் 
என எல்லாம் சேர்ந்து செவ்வனே 
மெருகேற்றப்பட்ட சிற்பமாய்..
போகலாம்....
*********************************************************

Tuesday, July 13, 2010

ஒரு பேதையின் பிரம்மை


எங்கே சென்றாய் 
நான் உன்னை விட்டு 
விலகி பயணிக்க தொடங்கிவிட்டேன்
என் நினைவுகள் எல்லாம் எனை மறந்து 
உன் வரவிற்கான பிரார்தனையில் 
மூழ்கிப் போய்விட்டன
நான் தனியாய் பயணிக்கும் 
பாதையில் யாரோ என் காதருகில் 
நகைக்கிறார்கள், உரையாடுகிறார்கள் 
வாழுகிறார்கள்; வாழ்த்துகிறார்கள் 
எனக்கு தெரியும் எல்லாம் மன பிரம்மை என்று 
ஆம் பிரம்மன் படைத்த ஒரு பேதையின் பிரம்மை...
***********************************************

Sunday, July 11, 2010

கண் வைத்தியம்
என் எதிரே அமர்ந்து 
என் வலிகளுக்கு எல்லாம் 
அமிர்ததானம் செய்துவிட்டு 
போகிறாய்-ஆமாம் 
நான் 
கைவைத்தியம் கேள்விப்பட்டிருகிறேன் 
இது என்ன கண் வைத்தியம்......
********************************************************************************

Saturday, July 10, 2010

கவிதை தொகுப்புகள் விரைவில்


என் தேவதையடனான நாட்கள் & மழைத்துளியின் மடல்கள்   - கவிதை தொகுப்புகள் 
விரைவில் ---உங்கள் வாசிப்புகள் மற்றும் விமர்சிப்புகளை தேடி.....................................

Tuesday, July 6, 2010

அழகிய முரண்பாடு


ஆம் நான் நிஜமில்லை 
நிழல் தான் பெண்ணே 
ஆனால் அதில் ஒரு 
சிறிய முரண்பாடு-நான் 
உன்னுடைய நிழல் 
இதுவும் அழகிய முரண்பாடு தான்,,,,,,
***************************************************************************

Wednesday, June 30, 2010

கடைசியாய் ஒரு கடிதம்


உன்னை  நினைத்து 
பார்க்கும் ஒவ்வொரு பொருளிலும் 
நீயாகவே பிரதிபலிக்கிறாய் 
எல்லோரும் சொல்வார்களே 
தனக்கு  இன்னொரு பக்கம் இருக்கிறது 
ஆம் 
என் இன்னொரு பக்கத்தை 
கொஞ்சம் திருப்பிப்பார்த்தால் -அதில்
 நீயே அதிகம் இருக்கிறாய் 
எனக்கு மட்டும் இரு இதயம் 
உன் நினைவுகளையும் சேர்த்து 
பள்ளத்தாக்குகளில் இருந்து  
எழும் கதிரவன் போல் 
உன் நெற்றி சுருக்கங்களில் 
தினமும் உதயமாகும் வண்ணப்பொட்டு
உன் பெயரும் தான் 
எத்தனை மங்களகரமானது -ஆம் அத்துனை 
கீர்த்தனைகளையும் உள்ளடக்கயுள்ளதே -எல்லோருக்கும்
 மகிழ ஒரு நண்பன் 
மனக்குறை சொல்ல ஒரு தோழி 
உடன் பயணிக்க ஒரு காதல்  
எனக்கு மட்டும் எல்லாமுமாய் நீ 
ஆம் பெண்ணே 
அனைத்தையும் சொல்ல ஓர் 
ஆத்மார்த்தமான 
நிமிடங்களை தேடிக்கொண்டிருந்தேன் 
தேடல்களிலே தொலைந்துவிட்டேன் 
அதற்குள் வழி மாறி விட்டோம் 
தோழன் என்றே உன்னுடன் பழகி இறுக்க
 முடியும்-ஆனால் அந்த பொய்யை உன் 
பிறை முகத்திருக்கேதிரே சொல்ல
 மனம் இல்லை என்னுள்..
இப்போதும் கடைசியாய் நீ அணிந்திருந்த 
வண்ண உடைகள் என்னை வாழ்த்திக்கொண்டே
 செல்கிறது- என் பாதையில்
 உள்ள துன்பங்களை துடைத்தபடி 
நான் மீண்டும் வருவேன் பெண்ணே!.........
*********************************************************************************************************

Tuesday, June 15, 2010

திருடிப்போ பெண்ணே!..அவள்
திருடிப்போக வேண்டும்
என்பதற்காகவே
என் இதயம்
அவள் பார்வை படும்
இடங்களில் எல்லாம்
பயணித்து கொண்டிருக்கிறது
அப்போதும் அவளுக்கு பிடிக்கவில்லை
ஒரு வேளை கற்கள் முட்களில்
எல்லாம் பயணித்து காயம் பட்டதினலோ
என்ன செய்ய கரடு முரடான இதயத்திலும் 
சில துளி அன்பு துளிக்கத்தான் செய்கிறது....
*********************************************************

Monday, June 14, 2010

பிராணவாயு


ஆம் 
நான் 
தோற்றுக்கொண்டே இருக்கிறேன் 
உனை
 மறந்திடுவேன் என்ற நிகழ்வில் 
என் 
எல்லா வெற்றிட செல்களிலும் 
நீ 
வந்து அமர்ந்து கொண்டிருக்கிறாய் 
பிராணவாயுவாக....
இனி நான் தோற்றுக்கொண்டே இருப்பேன்!...
******************************************************************************************************

முத்து முத்தாய்முத்து முத்தாய் 
உன் முகத்தில் 
வியர்வைத் துளிகள் 
மலர்ந்த போது தான் 
உணர்ந்து கொண்டேன் 
பூக்களுக்கும் வியர்க்கும் என்று!.....
*****************************************************************************************************************

Tuesday, May 18, 2010

பாவனைப் பெண்!

என்னுடன்
அமர்ந்திருந்த பத்து நிமிடங்களில்
எத்தனை பாவனைகள் உன்னுள் 
நேற்று வரை நீ
பாரதப்பெண் என்று
நினைத்தேன் இல்லை
நீ பாவனைப் பெண்!...
***********************************************************************

Sunday, May 9, 2010

என் செல்ல அம்மாவுக்கு


நேற்று வரைக்கும் 

என் அம்மாவிற்காய் 
எந்த ஒரு வாழ்த்தையும் 
தெரிவித்ததில்லை-இன்று 
எதோ ஒரு மூலையில் யாரும் 
இல்லமால் தனி மனிதமாய் 
பயணித்துக்கொண்டிருக்கிரேன்
அருகிலிருந்த போதெல்லாம்
 தெரிந்துகொள்வதில்லை


அம்மா அவள் 
உணவு பரிமாறும் போதும் 
உடல்நிலை சரியில்லை என்றால் 
உபசரிக்கும் போதும் 
கடிந்தே விழுவோம்
அவள் கண்கலங்கினாலும் 
நம்மிடம் காட்டிக்கொள்ள மறுப்பாள்

எத்தனையோ இரவுகள் 
எனக்காய் கண்விழிதிருப்பாள்
கருவுற்றநாளிலிருந்து 
இதுவரை தனக்காய் 
உண்டதில்லை 
உறங்கியதில்லை 
இப்போதும் 
தொலைபேசியில் 
அழைக்கும் போதும் 
முதல் கேள்வி 
எப்போ வருகிறாய் 
என்று தான் இருக்கும்
பிறகு தான் மற்றவை எல்லாம்


நான் தவறு செய்கிறேன் 
என்று எவர் சொன்னாலும் 
பொருட்படுத்தமட்டாள் 
என்னை விட அவளுக்கு 
என் மீது நம்பிக்கை அதிகம்
விளையாட ,பேச  
நண்பர்கள் 
தோழி 
காதலி-என 
எத்தனையோ உறவுகளை 
நமக்காய் உருவாகிக்கொண்டோம் 
அவர்களை பொறுத்தவரை 
''அ'' வும் நாம் தான் ''அந்தியும்'' நாம் தான் 
இத்தனை வருடங்களாய் பிள்ளைக்கல்வி 
மட்டுமே படித்துக்கொண்டிருந்தவளை
உலகறிவு போதவில்லை என்று 
முதியோர் இல்லக்கல்வி கற்க
 அனுப்புகிறான் -நிச்சயம்
 அவணறிவு 
முடமாகிப்போன முட்டாள் 

வாசலில் கடவுளை நிறுத்திவிட்டு 
கோடி கொடியாய் உண்டியலில் 
கொட்டி வரம் கேட்டலாம் 
எந்த ஒரு கற்களுக்கும்  
காது கேட்கப்போவதில்லை 
நமக்கெல்லாம் எப்படியோ 
எல்லா அம்மாக்களுக்கும்
சமையலறைதான் கடவுள் 
ஆம் 
இந்த கோவிலில் மட்டும் தான் 
பக்தர்களுக்கு உணவு படைத்த பிறகே
 கடவுள் ஏற்றுக்கொள்கிறது!..

என் செல்ல அம்மாவுக்கு அன்னையர் தின
வாழ்த்துகள் 
***************************************************************************************

Saturday, May 1, 2010

நாளை மிளிரும்கருவறுப்புகள்
கறுப்பு துணி ஆர்ப்பாட்டங்கள்
என  பாழாய்போனது
ஈழ நாடு 
நாம் பண்பட்டு விட்டோம் 
என்று சொல்லிக்கொள்வது 
வெட்கக்கேடு-என்று தான் 
முற்றுப்பெற போகிறதோ 
மேடைச்சொல் விடுதலை 
 ஒவ்வொரு தேசமாய்
எரிந்து கொண்டிருக்கட்டும்
இன்று அதில் குளிர் காய்ந்துகொள்ளுங்கள் 
நாளை என்னைப்போல் ஒருவன் வருவான்
அவன் விதைப்பான் பூமியில்
கன்னிவெடிகளை அல்ல அழகிய காதலை
அப்போது எங்கள் பூமி அழகாய் மிளிரும்!...
******************************************************************************************************

Friday, April 30, 2010

பிரிவின் வலிபிரிந்து வாழ்வது 
எவ்வளவு வலி என்பது 
பிடித்தவர்களை பிரிகையில் 
தான் தெரிகிறது-பிரிவின் 
சுகமும் பிடித்தவர்களை 
சேர்க்கையில் தான் தெரிகிறது
வெப்பத்தால் ஆவியாகி மீண்டும் 
மழை என வந்த நீர்த்துளியின் கூற்று!..
****************************************************************************************************************

Monday, April 26, 2010

சொல்லிக்கொள்ள ஒரு தோழி-என் எழுதுகோல்


என்னை முழுமையாக
புரிந்து கொண்ட தோழி
எழுதுகோல்-என் எண்ணத்தை
என்னை விட அழகாய்பிரதிபளிப்பவள்
நான் எதையோ
மனதில் கிறுக்கல் என நினைப்பதை 
கவிதையாய் வரைவாள்
சுருக்கமாகச்  சொல்லப்போனால்
வெள்ளைத்தாளில் வண்ண எண்ணம்
எழுதுகோல்....
*******************************************************

Sunday, April 25, 2010

நீ மழை ரசிகை $ நான் மலர் ரசிகன்ஒவ்வொரு முறையும் 
மழை வரும் போதும் 
ரசிக்கத்தான் முற்படுகிறேன் 
ஆனால் அதற்கு முன்னதாய் 
வானவில்லாய் நீ வந்து 
என்னுடன் அம்ர்ந்துகொள்கிராய்
இனி மழைக் எங்கே என்னில் இடம் 
மலரிவள் பேசுகையில்; நகைகையில் 
தோள்சாய்கையில்!..
நீ மழை ரசிகை; .நான் மலர் ரசிகன்
*******************************************************************************

Friday, April 23, 2010

என் அம்மா


என்
மறதியோ மரணமோ
அவளிற்காய் நிகழ்ந்திடல் வேண்டும் 
ஆம்-எனக்கு எது பிடிக்கும் 
என்று பார்த்து பார்த்து சமைக்கிறாள்
எனக்கேதேனும் என்றால் துடித்துப் போகிறாள் 
எனக்கு தெரிய அவள் இது வரை 
எங்கேயும் போனதில்லை-ஒரே ஒரு முறை 
என் அப்பாவுடன் கோவிலிற்கு மட்டும் 
அதுவும் என் பிறந்தநாள் என்பதால் 
எல்லோரும் சொல்வார்கள்-தினமும் 
அதிஷ்டத்தின் முகத்தில் விழிக்கவேண்டுமென்று 
எனக்கு நினைவு தெரிய 
அன்பின் முகத்திலயே விழித்துக்கொண்டிருக்கிரேன் 
காலை தேநீருடன் என் அம்மா!...
*******************************************************************

அவளால்!


ஒவ்வொரு நாளும்
முதல் மின்னஞ்சல்
குறுந்தகவல் -என
எல்லாவற்றையும் பார்க்கும் போதும்
அவளுடையதாக  இருக்க வேண்டுமென்று
மனம் படபடத்துக்  கொள்கிறது
அது அவளுடையதாக இல்லை எனில்
பதபதைத்தே போகிறது மனம் -ஒரு வேளை
அவள் நலமுடன் இல்லையோ என்று
அப்போது தெரிகிறது எனக்குள்ளும்
ஒரு தாய்மை வாழ்கிறது என்று
அது அவளால் தான்!...
************************************************************************

Thursday, April 22, 2010

?அவள் நினைவுகளில் இருந்து
விடுபட  முயல்கிறேன்
சிறிது சிறிதாய்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது
அவளை மறந்திட வேண்டும் என்று 

நினைக்கும் நொடிகளில் மட்டும் 
ஆனால் சில நேரம் நான் மறந்தே போகிறேன் 
அவளை மறக்க வேண்டும் என்பதை
ஆம்,
இந்த மறதி மட்டுமே 
நினைவு படுத்திக் கொண்டிருக்கிறது 
நான் உயிருடன் இருகிறேன் என்று!.
****************************************************************************

Wednesday, April 21, 2010

பெண் நிலவுகடந்த வாரம் எனக்கு 
இரவு நேர வேலை
பகலில் தான் உறங்குவேன் 
அப்படி உறங்குகையில் ஒரு நாள் 
என்னருகில் உறங்க வந்தாய் 
நான் எழுந்து கொண்டேன் 
என்ன இடைஞ்சலா என்று கேட்டாய் 
இல்லை இல்லை ஒரு நாளாவது
பகலில் நிலவு உறங்குவதை 
பார்க்கலாமே என்று தான் 
எழுந்து கொண்டேன் என்றேன்-சிரித்தாய் 
நான் அன்றைய தினம் முழு பெவுர்ணமி 
என்றே நினைத்தேன்-ஓ 
இவள் தான் பெண்  நிலவோ!........
********************************************************************** 

என் வீட்டு அம்மன்


தீபாவளி சிறப்பு விற்பனை 
அறிவித்திருந்தார்கள் 
சரி, என் வீட்டு 
அம்மனுக்கு பட்டுத்தலாமென்று
உன்னை அழைத்துச் சென்றேன் 
நீயும் பட்டுடுத்திப் பார்க்கிறேன்
என்று உடுத்திக்கொண்டு வந்தாய் 
உனைப் பார்த்த ஒரு குழந்தை 
கத்தியேவிட்டது-ஆச்சிரியத்தில் 
சிறப்பு விற்பனையில் 
மெழுகுச் சிலை ஏதும் 
விற்பனை செய்கிறார்களா என்று..... 

Tuesday, April 20, 2010

கடைசி நொடி சுவாசம்


கடலென பெய்யும் மழை
காற்று சுழன்றடிக்க
கதிரவன் ஒழிந்தும்
வெளிவந்தும் விளையாட,
எல்லோரும்-ஓர்
ஒலைக்குடிசையில்
தஞ்சம் புகுந்தோம்
பாவம் அப்போது
எங்களுக்கு
நேரெதிர் திசையில்
அலைந்து ஒளிந்து
மடிந்து -இனிமேல்
முடியாது போவென
உதிர்ந்தே போனாள்
அந்த ஒற்றை
ரோஜா இலை
அப்போது உணர்ந்தேன்
கடைசி நொடி சுவாசம்
எப்படி இருக்குமென்று.....
....

நீயும் உன்மீதான என் அன்பும்நான் எப்போதும் 
உன்னை வெறுத்து 
ஒதுக்குகிறேன்-அப்போதும் 
நீ என்னிடம் பேசத்தான் செய்கிறாய் 
என்று கேட்டாய்-அது எப்பிடி 
குழந்தையும் தான் தவறு 
செய்கிறது-அதற்காய் 
தாயென்ன ஒதுக்கவா செய்கிறாள் 
நீயும் உன மீதான அன்பும் 
எனக்கு ஒரு குழந்தை போன்றுதான்
உன்னை பிரதிபலிபதற்கான பிம்பம் தான் நான்
வருத்தப்படாதே- உன்னை அழகாகவே 
பிரதிபலிப்பேன்!....
*****************************************************************************

Monday, April 19, 2010

உனது ஓவியத்தை நான் பார்க்கையில்நான் முக்கியமான
அலுவலக வேலைகளை 
பார்த்துக்கொண்டிருப்பேன் 
எங்கோ இருந்து ஓடி வருவாய் 
வந்தென்னிடம் -நான் 
போட்ட  கோலத்தை பாருங்கள்
என்று விடா பிடியாய் 
அழைத்துக்கொண்டு செல்வாய் 
நீ விடுத்தாலும் நான் 
விடைபெற மாட்டேன் அது வேறு 
நான் ஆர்வமாய் பார்ப்பேன் 
ஒரு புள்ளிமட்டுமே வைத்திருப்பாய் 
பிறகுனைப் பார்க்கையில் 
நீ வெட்கிச் சிவப்பாய் 
நானோ சிரித்தே சிவப்பேன்!... 
**********************************************************************

மலர்கிறாய்


ஒவ்வொரு நாளும்
நீ
புதிதாய் தெரிகிறாய்
உருகி மலர்கிறாய்
ஏனென்று யோசித்தேன்
நான் ஏதோ ஒன்றை
புதிதாய் உணர்ந்தேன்
இப்போது புரிகிறது
மலரே மலரை நினைகையில்
மலர்ந்திடத்தானே செய்யும்!...

Saturday, April 17, 2010

உன் வாசம்தாய் அருகிருக்க
பசி அறியா பிள்ளை போலத்தான்
நீ அருகிருக்க
உன் வாசம் நான் அறியவில்லை
இன்று நீ பிரிந்து சென்றாய்
நான் புரிந்து கொண்டேன்
மரமிருந்து பூ உதிர்ந்தாலும்
வடு மட்டும் எஞ்சியிருப்பது
போலத்தான்-நீ
கடைசியாய் என் விரல்
தொட்டு விடை பெற்றாயே
அதில் இன்னும் உன் வாசனை
பதிந்தே இருக்கிறது!...
***********************************************

Friday, April 16, 2010

வழி சொல் வலிக்காமல் வரைந்திட !..கண்மூடி என்ன
மண்மூடிப் போனாலும்
உன் முகம் வரைந்திடுவேன்
உனக்கு வலிக்காமல் எப்படி
உனை பிரசிவிப்பேன் என்றுதான்
சிந்தித்துக்கொண்டிருக்கிரேன்!...
ஒரு வழிசொல் வலிக்காமல் வரைந்திட !..
********************************************************

Wednesday, April 14, 2010

வீதியுலாஎல்லோரும்
வீதியுலா செல்லும் போது
வேண்டாததை வீசிவிட்டு
செல்கிறார்கள் என்றால்
நீ மட்டும்
எனக்கு வேண்டியதை அல்லவா
வீசிவிட்டு செல்கிறாய்
உன் வெட்கத்தை!...
*******************************************************

Sunday, April 11, 2010

என் சில நேரம்நானும் சில நேரங்களில்
நெடுஞ்சாலை மரம் போலத்தான்
என் கனுவுகளை எத்தனையோபேர்
மிதித்துவிட்டு போகிறார்கள்-என்ன
சில நேரம் உன்னை போன்ற சில
தேவதைகளும்-ஆனாலும்
வலிக்க மறுக்கிறது
ஆம்
உன் கால்களும் என் கனவுகளைப்போன்று
மென்மையாக இருப்பதினாலோ என்னவோ!...

Saturday, April 10, 2010

lyrics

Monkey also have common sense..


Two blind persons wanted to drink water at the RagiGudda temple, Bangalore. When they were unable to operate the tap, this mother monkey opened the tap for them, allowed them to drink water, drank some water herself and then closed the tap before leaving the scene.

PS: Do share this pic with your friends. It is proof that humanity does exist - even if we humans have forgotten it ourselves...

Thursday, April 8, 2010

எவரிடம் சொல்லதனிமையில் அமர்கையில்
உன் நினைவுகள் வருகிறது
அதை மறுக்க முயல்கையில்
நான் என்னை மறந்தே போகிறேன்
நீ என்னிடம் சொல்லிவிட்டாய் பேசாதே என்று
நான் எவரிடம் சொல்ல உயிருடன் இல்லையென்று!...

Sunday, April 4, 2010

ஒருகணம்
எல்லாம் உன்முகமாய் தெரிகிறதே
என்னிதையம் ஒருமுகமாய் துடிக்கிறதே
ஏனோ தொலைகிறேன்
எதையோ சொல்ல நினைக்கிறேன்
ஒரு துளி; ஒருகணம் வாழ்வோம் வா வா!..

Saturday, April 3, 2010

அங்காடித் தெருஅங்காடித் தெரு- திரையில் காணவும்.
புதியதோர் பரிமாணத்தில் தமிழ் திரையுலகம்

Saturday, March 27, 2010

எங்கள் ஈழக்குழந்தையின் குறள்


புதிதாய் பிறந்த எங்கள் ஈழக்குழந்தையின் குறள்

எங்கள் தாய் மண்ணிலேயே
இறைச்சித் துண்டாய்
மிதிபட்டுக் கிடக்கின்றோம்
இது தற்காலிகமானது தான்
கம்பிவேலிகளுக்குள் கிடக்க
நாங்கள் கற்கள் அல்ல
காந்தப்புலங்கள்!....

பார்வைக் கொள்ளைக்காரி


பார்வைக் கொள்ளைக்காரி

முட்டாள்கள்
விதவிதமான ஆயுதங்களின்
உதவியுடன் கொள்ளையடித்து
கொண்டு போகிறார்கள்
ஆனால் நீயோ,
ஒரு சிறு ஓரப் பார்வையால்
எல்லோரையும்
கொள்ளைகொண்டு விடுகிறாய்
என் பார்வைக் கொள்ளைக்காரி
இன்னும் கொஞ்சநேரம்
உன் பார்வையால் பேசிவிட்டுப்போ!.....
*********************************************************************

Friday, March 26, 2010

தேடித் தொலைகிற காலம்


தேடித் தொலைகிற காலம்

அது கல்லூரி காலம்
ஒரு நல்ல நட்பு
அன்புத் தோழி
தேர்வுக்காய்
கடைசி நொடி படிப்பு
கல்லூரி விழா -என
எல்லாவற்றையும்
தேடித் திரும்புவதற்குள்
அந்த கடைசி நாள் வந்து விடும்..
மீண்டும் தொலைத்தோம்
வெகு நாட்களுக்கு பிறகு
சந்தித்துகொள்வோம்-எனினும்
அப்போதும் கண்ணீர் மல்க
சில நினைவர்களை தேடிக்கொண்டிருப்போம்!...

Thursday, March 25, 2010

உன் பெயர்தான் புன்னகை பூவோ!.எத்தனையோ
ஆண்டுகளுக்கு முன்னர்
பல அரிய மிருகங்கள்
பூமியில் வாழ்ந்தனவாம்!
அது எல்லாம் எனக்கு தெரியாது
சுமார் இருபத்திரண்டு ஆண்டுகளாய்
ஒரு பூ வளர்ந்து கொண்டும்
புன்னகத்துக்கொணடும்
என்னுடன் பேசிக்கொண்டும்
இருக்கிறது!....
******************************************************************

Tuesday, March 23, 2010

நீயே சொல்

நீயே சொல்
நான் என்ன செய்ய,
உன்னை மறக்க முடியாதா என்கிறேன்
முயன்று பார்க்கிறேன்
போகும் பார்க்கும்
என எல்லா இடங்களிலும்
நீயே நினைவாடுகிராய்
அது
பொட்டல் காடானாலும் சரி,
புனலுரும் பூமியானாலும் சரி,
இப்போதும் நான் என்ன செய
நீயே சொல்!...
***********************************************************

Wednesday, March 3, 2010

ART

Thursday, February 25, 2010

பேசும் விழிகள்
பேசும் விழிகள்

நீ
பேசமறுத்த
நான் பேச முடியாமல் போன
நாட்கள் மட்டுமல்ல -நீ
பார்க்க மறுத்த நாட்களும்
எனக்கு ஊமையான நாட்கள்தான்
ஆம்
அந்த நாட்களில்
உன் பேசும் விழியை
பார்க்கமுடியாமல் போயிற்றே!.............

Monday, February 22, 2010

தினமும்


தினமும்
தினமும்
உனக்கான
ஒரு
கவிதை
புன்னகை
மின்னஞ்சல்
குறுந்தகவல்
என எல்லாம்
என் இதயத்தில்
சேமிக்கப்பட்டுகிறது!........

Monday, February 15, 2010

நீ அழகானவள்

நீ அழகானவள்

உன்னை,
முதன் முதலாய்
பிடித்திருகிறது என்று
நான் சொன்ன போது
நீ!
அழகாக இருக்கிராய்
அதனால் தான்
சொல்கிறேன் என
தவறாக நினைத்திருப்பாய்
மன்னித்துவிடு,
உன்னுடன் பேசிய
ஒவ்வொரு நொடியும்
எந்த ஒரு ஸ்பரிசத்தையும்
எதிர்பார்த்ததில்லை
மாறுதலாக
முழுமையான அன்பினை
மட்டுமே எதிர் பார்த்திருக்கிறேன்
எப்போதும் அதை மட்டுமே
எதிர்பார்ப்பேன்
இருப்பினும் நீ
அழகானவள் என்பது
உண்மைதானடி பேதை பெண்ணே!....
எதுவானாலும்
வெளிப்படையாய் சொன்னாயே
அப்போதெல்லாம் நீ அழகானவள்!.....

Thursday, February 4, 2010

தெரியாத ஏனென்று???தெரியாத ஏனென்று???

இன்று
கொஞ்சம் நானே
என்னை நேசிக்கிறேன்,
அடி பேதை பெண்ணே
தெரியாத ஏனென்று
இன்று நீ
என்னை முதன் முதலாய்
பார்த்து புன்னகைத்த தினம்
புன்னகை தினம்
சரி நிறுத்திவிடுகிறேன்
உனக்கு புகழ்ச்சி பிடிக்காதென்று
எனக்கு தெரியும்!..
**********************************************

Monday, February 1, 2010

கொஞ்சம் காதலித்துப்பார்!


கொஞ்சம் காதலித்துப்பார்!...
நீ
படிக்க
விளையாடா,
எழுதிப்பார்க்க
கற்றுக்கொள்ள-என
தயாரிக்கப்பட்ட
புத்தகங்கள்
விளையாட்டுப் பொருட்களை
போலத்தான்,
என் இதயமும்
நீ காதலிப்பதற்காக
துளிர்க்கப்பட்ட ஒன்று
கொஞ்சம் காதலித்துப்பார்!...
^ Scroll to Top